தாய்லாந்து பறக்கவுள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்


இலங்கை -  தாய்லாந்து  நாடுகளுக்கு இடையில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு தொடர்பான ஒப்பந்த வரைபுக்கு தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


நேற்று (17) இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதி பேச்சாளர் புளொய்தலே லக்சமீசெங்ஜான் தெரிவித்துள்ளார்.


இந்த ஒப்பந்த வரைபின்படி, இரு நாடுகளினதும் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி ஒரு பயணத்தில் அதிகபட்சம் 30 நாட்கள் வரை மற்றைய நாட்டில் தங்கியிருக்க முடியும்.


எனினும், 180 நாட்கள் கொண்ட காலப்பகுதியில் மொத்தமாக 90 நாட்களுக்கு மேல் தங்கியிருக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.