'அத்திடிய கூரா' கைது.


கல்கிஸ்ஸயில் 6 வீடுகளை உடைத்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களைத் திருடிய 'அத்திடிய கூரா' கைது.


வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் சுமார் ஒரு வருட காலப்பகுதிக்குள் இத்திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இதன்போது சந்தேகநபரால் தொலைக்காட்சிப் பெட்டிகள், கசெட் இயந்திரங்கள், மடிக்கணினிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளன.


குறித்த பொருட்களை விற்பனை செய்து பெற்றுக்கொண்ட பணத்தைச் சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்காகப் பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.