முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் எரிபொருளுக்கான செலவை மீளச்செலுத்திய மஹிபால ஹேரத்
முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் 11,320 லீற்றர் எரிபொருளுக்கான செலவான 1.17 மில்லியன் (11,70,000) ரூபாவை வடமத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத் செலுத்தியுள்ளார்.
முன்னாள் ஆளுநரால் 11,320 லீற்றர் எரிபொருள் பயன்படுத்தப்பட்டமையானது சுற்றுநிரூப அறிவுறுத்தல்களுக்கு முரணானது எனச் சுட்டிக்காட்டிய கணக்காய்வாளர் நாயக திணைக்களம், அந்த 1.17 மில்லியன் ரூபாயையும் மீளப் பெறுமாறு மாகாண சபைக்கு அறிவுறுத்தியிருந்தது.
இதனையடுத்து, முன்னாள் ஆளுநர் குறித்த தொகையைப் பணமாகச் செலுத்தி நிவர்த்தி செய்துள்ளதாக வடமத்திய மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் அருண ரவி, புதன்கிழமை (04) அன்று தெரிவித்துள்ளார். See less

Post a Comment