பில்லியன் பில்லியனாக வருமானமீட்டும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்


இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கடந்த 9 மாத காலத்தில், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 4,400 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.


இதற்கமைய, குறிப்பிடப்பட்ட காலத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 4,487.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.


கடந்த 2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக 2,961.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தன.


அதனுடன் ஒபபிடுகையில், இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக 1,525.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதுடன், இது 51.5% அதிகரிப்பாகும்.


 இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிகர விற்பனை வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது.


அதன்படி 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 410.7 பில்லியன் ரூபாயாக பதிவான நிகர விற்பனை வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 40.4% இனால் அதிகரித்து 576.6 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.

No comments

Powered by Blogger.