பொய்ப் பிரச்சாரங்கள், வதந்திகளைக் கண்டு மக்கள் குழப்பமடைய வேண்டாம்
டின் இலக்கங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடைமுறையானது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதால், மக்கள் எவ்வித அவசரமுமின்றி நிதானமாக இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இது குறித்து பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரங்கள், வதந்திகளைக் கண்டு மக்கள் குழப்பமடைய வேண்டாம்
புதிய வங்கிக் கணக்குகளைத் திறப்பது மற்றும் வாகன அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பது போன்றவற்றிற்கு டின் இலக்கம் உடனடியாக இல்லாத பட்சத்தில், தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி அச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான தற்காலிகத் தளர்வுகள் மற்றும் புதிய வழிகாட்டல்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட 17 மில்லியன் மக்களில் ஏற்கனவே 13 மில்லியன் பேருக்கு டின் இலக்கம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1.2 மில்லியன் பேரே வருமான வரி செலுத்துபவர்களாகப் பதிவாகியுள்ளனர். மீதமுள்ள 4 மில்லியன் மக்களுக்கே இந்த இலக்கம் தேவைப்படும்.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Post a Comment