ரஷ்யாவின் நகரை முஸ்லிம்கள் கைப்பற்றிய போது, கலீபாவிடம் வந்த புகார்
வாயிற்காப்போன் அழைத்தான்: "குதைபா!" ('அரபுலகின் அலெக்ஸாண்டர்’ என்று அழைக்கப்படும் மாபெரும் தளபதி குதைபா வெறுமனே பெயர்சொல்லி அழைக்கப்பட்டார்).
சமர்கண்ட் மக்களிடம் நீதிபதி: "உங்கள் புகார் என்ன?"
அவர்கள்: "குதைபா திடீரெனத் தாக்கி, எங்கள் நகரைக் கைப்பற்றிவிட்டார். அவர் எங்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கவுமில்லை, எங்களுக்கு அவகாசம் அளிக்கவுமில்லை"
நீதிபதி: "குதைபா! இதைப் பற்றி உமது தரப்பு வாதம் என்ன?"
குதைபா: "போர் என்பது ஒரு தந்திரம். சமர்கண்ட் பெரும் நகரம். இந்த நகரைச் சுற்றி பெரும் நகரங்கள் உள்ளன. அவர்கள் எங்களை தாக்கினால் என்னாவது? எனவேதான் முன்னறிவிப்பு இன்றி கைப்பற்றினோம்"
நீதிபதி: "குதைபா! சுற்றிவளைத்து பேசவேண்டாம்! நீர் அவர்களை இஸ்லாத்தையோ, ஜிஸ்யாவையோ அல்லது போரினையோ ஏற்கும்படி அழைப்பு விடுத்தீரா?"
குதைபா: "இல்லை! ஆனால்.. நான் முன்பே குறிப்பிட்டது போல்..."
நீதிபதி குறுக்கிட்டு: "போதும்! நீர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே நான் காண்கிறேன்”.
மக்களிடம் நீதிபதி: "பிரதிவாதி ஒப்புக்கொண்டதால் விசாரணை முடிவுக்கு வருகிறது”.
குதைபாவிடம் நீதிபதி: "குதைபா! வஞ்சகத்தைத் தவிர்த்தல், நீதியை நிலைநாட்டல் ஆகியவற்றின் மூலமாகத்தான் அல்லாஹ் இந்தச் சமூகத்திற்கு வெற்றியை அளிக்கிறான் என்பதை நீர் மறக்க வேண்டாம்!"
மக்களிடம் நீதிபதி: "நாங்கள் வழங்கும் தீர்ப்பு: அதிகாரிகள், படைகள், ஆண்கள், குழந்தைகள், பெண்கள் என முஸ்லிம்கள் அனைவரும் உடனே சமார்கண்ட் நகரை விட்டு வெளியேற வேண்டும். கடைகளும் வீடுகளும் அப்படியே விட்டுச் செல்லப்பட வேண்டும். சமார்கண்டில் எவரும் இருக்கக் கூடாது. அதன் பிறகு முஸ்லிம்கள் அவர்களுக்கு (மீண்டும்) எச்சரிக்கை விடுக்க வேண்டும்!!"
தாங்கள் கண்டதையும் கேட்டதையும் சமர்கண்ட் மதகுருமார்களால் நம்பவே முடியவில்லை. சம்பவம் நடந்திருக்கிறது. எனவே சில நிமிடங்களிலேயே விசாரணை முடிந்துவிட்டது.
சில மணி நேரங்களுக்குப் பிறகு, பெருஞ்சலசலப்பும், ஓசைகளும், தூசுகள் எங்கும் பறப்பதும், தூசுப் புயலுக்கு இடையில் கொடிகள் அசைவதையும் சமர்கண்ட் மக்கள் பார்த்தனர். மதகுருமார்கள் என்னவென்று விசாரித்தனர்.
தீர்ப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது என்றும், படை பின்வாங்கிவிட்டது என்றும் கூறப்பட்டது.
அது மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாக இருந்தது. அன்றைய சூரியன் மறையுமுன்பே சமார்கண்ட் வீதிகள் வெறிச்சோடிப் போயின.
அதேவேளை நேர்மையும், இரக்கமும் மிக்க முஸ்லிம்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியதை எண்ணி வீடுகளில் அழும் குரல் கேட்டது.
மதகுருமார்களும் சமார்கண்ட் மக்களும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதனர்.
ஊர் மக்கள் கூட்டமாகச் சென்று தலைமை மதகுருவையும் அழைத்துக் கொண்டு, முஸ்லிம்களின் இராணுவ முகாமுக்கு முன்னால் நின்று;
"அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மத் அல்லாஹ்வின் தூதர்" என்று உரத்து முழங்கினர். அந்த சாட்சி மொழியால் நகர வீதிகளும் ராணுவ முகாமும் குலுங்கியது.
விசாரணைக்கு உத்தவிட்டது யார் தெரியுமா? 5-ஆம் நேர்வழி பெற்ற கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்).
(நூல்: உமர் இப்னு அப்துல் அஸீஸ் - அலீ ஸல்லாபி)
இது அரசியல் பதிவல்ல!
✍️ நூஹ் மஹ்ழரி

Post a Comment