இலங்கைத் தூதுவருடன் கட்டார் நீர்கொழும்பு சமூக அமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு!
இச்சந்திப்பில் அமைப்பின் தலைவர் திரு. ஷபீப், செயலாளர் திரு. உஸ்மான், பொதுச் ஆலோசகர் திரு. அம்ஜத் மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர் திரு. முஜீப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அமைப்பின் தலைவர், கட்டார் நீர்கொழும்பு சமூக அமைப்பின் நோக்கம், தொலைநோக்குப் பார்வை மற்றும் சமூக நலச் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.
மேலும், அமைப்பினால் இலங்கையர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவுள்ள பொது மருத்துவ முகாமில் கலந்துகொள்ளுமாறு தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சந்திப்பின்போது, கட்டாரில் சமூக அமைப்புகள் செயற்பட வேண்டிய வழிமுறைகள், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு, குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு, சுகாதார மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள் தொடர்பாக தூதுவர் ஆலோசனைகளை வழங்கினார்.
கட்டார் நீர்கொழும்பு சமூக அமைப்பின் எதிர்கால நிகழ்ச்சிகள் வெற்றிபெற தூதுவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சந்திப்பின் இறுதியில், இலங்கை சமூகத்திற்கான தூதுவரின் சேவைகளைப் பாராட்டி, அமைப்பின் தலைவர் திரு. ஷபீப் நினைவுச் சின்னமொன்றை வழங்கி கௌரவித்தார். செயலாளர் திரு. உஸ்மான் எதிர்வரும் பொது மருத்துவ முகாமுக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழைத் தூதுவரிடம் கையளித்தார்.
கத்தாரில் இருந்து நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்

Post a Comment