இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் குறித்து பிரிட்டன் மக்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..?
உலக அமைதிக்கு இஸ்ரேல் தீவிர அச்சுறுத்தலாக இருப்பதாக 78% பிரிட்டன் மக்கள் கருதுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனின் தேசிய சமூக ஆய்வு மையம் (NatCen) வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் சமூக அணுகுமுறைகள் ஆய்வின்படி, 2005ஆம் ஆண்டு இஸ்ரேலை அச்சுறுத்தலாகக் கருதியோர் எண்ணிக்கை 48% ஆக இருந்த நிலையில், தற்போது 78% ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்காவை உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகக் கருதுவோரின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 35% இலிருந்து 74% ஆக இரட்டிப்படைந்துள்ளது.
மேலும், ரஷ்யாவை 89% பேரும், ஈரானை 75% பேரும், சீனாவை 62% பேரும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகக் கருதுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment