சத்தாரதன தேரர் கைது செய்யப்படாதது ஏன்..?


அநுராதபுரம் ருவன்வெலிசாய பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை வழிநடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தத் தவறியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு அநுராதபுரம் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


 இதன்படி, எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு அநுராதபுரம் பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.