மழைநீர் தேங்குவதால் ஏற்படும் வெள்ளப் பிரச்சினை - மேயர் தலைமையில் இன்று விசேட பேச்சு


கொழும்பு நகரில் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (7) நடைபெறவுள்ளது.


கொழும்பு மாநகர சபையின் முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில், நகரின் மழைநீர் வடிந்தோடுவதில் நிலவும் சிக்கல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.


அத்துடன், மழைநீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், இப்பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்குமான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.