புதையலுக்காக கழுத்தை அறுத்துக் கொலை
வீட்டின் தோட்டத்தில் புதையல் இருப்பதாக நம்பப்பட்டு, அதனை எடுப்பதற்காக பொத்துவில் பிரதேசத்தில் வீட்டு உரிமையாளரின் இளைய சகோதரரை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீட்டு உரிமையாளரின் இளைய சகோதரரான 41 வயதுடைய நிமல் கருணாரத்ன என்ற திருமணமாகாத நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் உள்ளவர்கள், கொலை செய்யப்பட்ட சகோதரரின் இறுதிச் சடங்கிற்கு சென்ற பின்னர் அந்தப் புதையலைத் தோண்டி எடுக்க திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் பயனாக கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம்மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை மஹவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் அனுருத்திகா செனவிரத்ன உத்தரவிட்டார்.

Post a Comment