கைது செய்யப்பட்ட வருணிக்கு விளக்கமறியலில்


கார் ஒன்றை கொள்வனவு செய்வதற்கும், அதன் தவணைக் கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பணம் கிடைத்த விதம் குறித்து உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 (CID) கைது செய்யப்பட்ட அவர், இன்று (3) மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய அவரது நவீன ரக கார் ஒன்றும் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.


மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரினால், குறித்த காரின் லீசிங் தவணைக் கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.