வெலிக்கடை சிறைச்சாலையில் வீரவன்சவின் மனைவி


 2  வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச, வெலிக்கடை சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.


நேற்று -19- இரவு குறித்த சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட அவர், முதலில் கைதியாக பதிவு செய்யப்பட்டார்.  பெண் கைதிகளுக்கு வழங்கப்படும் வெள்ளை நிறச் சேலை மற்றும் சட்டை ஆகியன சஷி வீரவன்சவுக்கும் வழங்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் கூறியுள்ளது.


இதேவேளை, சஷி வீரவன்ச சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில், அருகில் நின்றிருந்த அவரது மகள் அவருக்குக் கையசைத்து விடைகொடுத்துள்ளார். அத்துடன், தூரத்திலிருந்தவாறு வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட காட்சி காணொளியாக பதிவாகியுள்ளது. 

No comments

Powered by Blogger.