எரிபொருட்கள் விலை அதிகரிப்பு
இன்று (1) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் திருத்தியமைத்துள்ளது.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 397ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூ. 392).
லங்கா சுப்பர் டீசல் 4 லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 543 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூ. 528).
பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூபா 424 ஆகப் பதிவாகியுள்ளது (முந்தைய விலை: ரூ. 414).
பெட்ரோல் 95 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூ. 475).

Post a Comment