குகைக்குள் சிக்கிய சிறுமியின் அடையாளத்தை அம்பலப்படுத்தியவர்களுக்கு சிறை தண்டனை
குகையொன்றில் தங்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
“தகாத முறையில் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்கள் அல்லது பெண்களின் பெயர், புகைப்படம், காணொளி அல்லது வேறு ஏதேனும் வகையில் அவர்களின் அடையாளம் வெளிப்படுமாறு பிரசுரிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இது தண்டனைச் சட்டக்கோவையின்கீழ் 2 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய பாரதூரமான குற்றமாகும்.

Post a Comment