நல்ல மரணம் என்பது என்ன தெரியுமா..?


'மக்காவில் மரணிப்பதுதான் என் ஒரே நிய்யத்’ என்றார் ஒருவர்.


'எல்லா வேண்டாத வேலைகளையும் செய்துவிட்டு அங்கு சென்று மரணித்தால் எல்லாம் சரியாகிவிடுமா?’ என்று கேட்டேன்.


'உங்களுக்கு ஒண்ணுமே தெரியல’ என்றார்.


அங்கு மரணிப்பதுதான் நல்ல மரணம் என்று நினைத்தாரோ என்னவோ…? 


(அவனுங்களே 'ஹாலோவீன்’ என்ற பெயரில் என்னவெல்லாமோ பண்றானுங்க)


நல்ல மரணம் என்பது, தொழுகையில், சஜ்தா செய்த நிலையில் மரணிப்பதோ, ​​ரமளான் மாதத்தில் மரணிப்பதோ, வெள்ளிக்கிழமை இரவில் மரணிப்பதோ, குர்ஆன் ஓதும்போது மரணிப்பதோ, ​​ஹஜ் அல்லது உம்ரா செய்யும்போது மரணிப்பதோ அல்ல.


அப்படிப் பார்த்தால் அனேக மரணங்களை நல்ல மரணம் என்று சொல்ல முடியாது.


நபி (ஸல்) அவர்கள் மனைவியின் மடியில் மரணித்தார்கள். அபூபக்கர் (ரலி) படுக்கையில் மரணித்தார். காலித் பின் வலீத் (ரலி) படுக்கையில்தான் மரணித்தார்.


இதுவெல்லாம் நல்ல மரணம் இல்லையா? நல்ல மரணம் என்பது என்ன தெரியுமா?


சிறந்த முஸ்லிமாகவும் பாசாங்குத்தனம் அற்றவராகவும் வாழ்ந்து மரணிப்பது. யாருக்கும் அநியாயம் செய்யாமல், யாரையும் வஞ்சிக்காமல் வாழ்ந்து மரணிப்பது. அல்லாஹ்வைச் சந்திக்க ஏங்கி, அந்த ஏக்கத்துடனேயே மரணிப்பது. தொழுத தொழுகை விரிப்பும் ஓதிய குர்ஆன் பிரதியும் உங்களை இழந்து வாடும் நிலையில் மரணிப்பது. தொழுகையில் ஸஜ்தா செய்த இடம் உங்களைத் தேடி அழும் நிலையில் மரணிப்பது.


எப்படி வாழ்கிறோமோ அப்படித்தானே மரணமும் இருக்கும்.


✍️ நூஹ் மஹ்ழரி 

No comments

Powered by Blogger.