7 கோடி ரூபா பணத்தை வைப்பிலிட்ட பெண்
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்களால் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டதாகக் கூறப்படும் 4 வங்கிக் கணக்குகள் தொடர்பில் 49 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றக்கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் உள்ளிட்ட 5 நபர்கள் தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது ஒருவரின் சகோதரியால் பராமரிக்கப்பட்டு வந்த 4 வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, குறித்த வங்கிக் கணக்குகளைப் பராமரித்து வந்த 49 வயதுடைய பெண், நேற்று விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மடபாத்த பகுதியைச் சேர்ந்த குறித்த பெண்ணை இன்று (6) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment