சவூதி அ மீதான தாக்குதல்களை நிறுத்த 51 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு..?
சவூதி அரேபியா மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு 51 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும், யேமனின் அதிகாரபூர்வ ஆட்சியாளர்களாக தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நிபந்தனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி தலைமையிலான கூட்டணியின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் நீண்டகால முற்றுகையினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடாகவே இந்தத் தொகையை ஹூதிகள் கோரியுள்ளனர்.
மேலும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசாங்கத்துக்கான தனது ஆதரவை சவூதி கைவிட வேண்டிய நிலை ஏற்படும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment