பட்ஜட் 2027 நாளை சமர்ப்பிப்பு - ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள விடயம்
2027-ஆம் ஆண்டிற்கான பட்ஜட் முன்மொழிவுகளை உள்ளடக்கிய இறுதி ஆவணத்தை இன்று (11) ஜனாதிபதி அநுரகுமார, நிதியமைச்சு செயலாளருடன் இணைந்து பார்வையிட்டுள்ளார்.
நாம் எதிர்கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டுச் சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள பொருளாதார நிலைத்தன்மையின் பலன்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையிலும், மாற்றத்தை ஏற்படுத்தும் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலும் இந்த ஆண்டு பட்ஜட் திட்டத்தில் பல முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் நிதியமைச்சர் என்ற ரீதியில் அநுரகுமாரவினால் நாளை, 12 ஆம் திகதி, வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Post a Comment