கஸ்ஸப தேரருக்கு எதிராக JVP முறைப்பாடு, ஜனாதிபதி அடிக்கடி வருகை தருவதால், கட்சி தலைமையகத்திற்கு அச்சுறுத்தல்


கஸ்ஸப தேரருக்கு எதிராக ஜே.வி.பி  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, இரண்டு கத்திகளுடன் பிடிபட்ட நபர் ஒருவர் பெலவத்தையிலுள்ள ஜேவிபி தலைமையகத்துடன் தொடர்புடையவர் என பலாங்கொட கஸ்ஸப தேரர் குற்றம் சாட்டியிருந்தார்.


இந்த கூற்று குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கோரி, ஜே.வி.பி கட்சி நேற்றயை தினம் சினமன் கார்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்து, கஸ்ஸப தேரர் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் பொய்யானது. இது மக்கள் மத்தியில் அமைதியின்மையை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்றும் ஜேவிபி சுட்டிக்காட்டியுள்ளது.


ஜேவிபி தலைமையகத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அடிக்கடி வருகை தருவதால், இந்த தவறான குற்றச்சாட்டால் கட்சியின் தலைமையகத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்றும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.