சூனியத்தினால் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று யாராவது நம்பினால்..?
சூனியத்தினால் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று யாராவது நம்பினால், அந்தச் சக்தியின் மூலமாவது தொடர்புடைய வழக்கு நடவடிக்கைகள் வெற்றியடைந்து, விசாரணைகள் விரைவுபடுத்தப்பட்டு, கண்டறிய முடியாத சான்றுகளைக் கண்டறிய முடியுமாகட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன் என்று பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டுக்கும், நாட்டின் மதத்துக்கும் மற்றும் மக்களுக்கும் தீங்கு விளைவித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் வலுவாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்காக யாராவது பிரார்த்தனை செய்தால், அவர்களின் அந்த நோக்கம் குறித்து எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
அரசியல் அதிகாரம் மற்றும் மத நம்பிக்கையைப் பயன்படுத்தி மக்களைத் தவறாக வழிநடத்துவது அல்லது தகாத நன்மைகளைப் பெறுவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சூனியத்தினால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுவதால் மட்டும் ஒருவரது தவறான செயல்களை மறைத்துவிட முடியாது.

Post a Comment