Header Ads



உலகிலேயே மிகச்சிறந்த முன்மாதிரி நாடாக இலங்கை

 
அரசாங்கம் என்ற வகையில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம், தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது எமக்கு நிர்வாக அனுபவம் இருக்கவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும், நாம் தனித்துச் செயற்படவில்லை. கொள்கைப்பூர்வமான ஓர் அரசியல் இயக்கமாக, சட்டத்துக்கு உட்பட்டு வலுவாகச் செயற்படுகின்றோம்.


கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவொரு அமைச்சரும் தனிச்சையாக முடிவெடுக்கவில்லை. கூட்டாக முடிவெடுத்து, குறைகளைத் திருத்திக் கொண்டு மக்களுக்குச் சேவை செய்ய அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றோம். நாட்டின் ஐந்தாண்டு ஆட்சிக் காலம் நிறைவடையும் போது, உலகிலேயே மிகச் சிறந்த முன்மாதிரி நாடாக இலங்கையை மாற்றுவோம் என்றார். 

No comments

Powered by Blogger.