ஜனாதிபதி பிடிவாதமாக, முரட்டுத்தனமாக நடந்துகொண்டால்...
ஞானசாரவின் பொது மன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதி பிடிவாதமாக, முரட்டுத்தனமாக நடந்துகொண்டால், சட்டப்பூர்வமாக தேரரை மீட்டெடுக்க வேறு வழியில்லை என்றால், வேறு ஒரு ஜனாதிபதியை நியமித்தேனும் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வோம் என பலாங்கொடை கஸ்ஸப பிக்கு விகாரமாதேவி பூங்காவில் இருந்து உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் அனுபவிக்கும் வேதனையை, சிறைக்குச் சென்ற தேரர்களாக நாங்கள் அறிவோம். அவர் தனிப்பட்ட விடயங்களைப் பற்றி பேசவில்லை. நாடு, இனம், பௌத்த சாசனம் பற்றியே பேசியுள்ளார். மாலை 5 மணிக்கு சிறைச்சாலை மூடப்பட்டால், மீண்டும் மறுநாள் காலை 5 மணிக்கே திறப்பார்கள். கழிவறைக்குச் செல்ல வழியில்லை.
உறங்குவது சிமெண்ட் தரையில் என பல சோதனைகளை அனுபவிக்கிறார். எமது நோக்கம் ஞானசார தேரரை நிபந்தனையன்றி விடுவிப்பதாகும். அரசாங்கம் வேறு ஏதோ நினைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் அவர்களைத் துரத்த வந்திருக்கிறோம் என்று.

Post a Comment