லண்டன் நோக்கி பறந்தவுடன் தரையிறக்கப்பட்ட விமானம்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று (28) லண்டன் நகர் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை மோதியதால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் இன்று பிற்பகல் 12:55 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்டது. விமானத்தில் 269 பயணிகளும் 15 பணியாளர்களும் இருந்தனர்.
பறவை மோதியதைத் தொடர்ந்து, விமானி வான்வெளியிலேயே நிலைமையைக் கட்டுப்படுத்தி, விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
பின்னர், அந்தப் பயணிகளை வேறொரு விமானம் மூலம் இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அனுப்பி விமான வைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment