Header Ads



ருமேஷ் தரங்காவின் வீட்டுக்குச் செல்லும் வீதி


இலங்கை ஈட்டி எறிதல் சம்பியன் ருமேஷ் தரங்காவின் வீட்டுக்குச் செல்லும் வீதியை, சுமார் 8 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய மில்லனிய பிரதேச சபை திட்டமிட்டுள்ளது.


கடந்த (13.10.2026) நடைபெற்ற பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தின்போது, அதன் தவிசாளர் இதனை அறிவித்துள்ளார்.


கூட்டத்தின்போது, விளையாட்டு வீரரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் குறித்த வீதிக்கு “ஈட்டி எறிதல் சம்பியன் ருமேஷ் தரங்கா” எனப் பெயரிடுவதற்கான முன்மொழிவை உறுப்பினர் கயான் சம்பத் முன்வைத்துள்ளார்.


வீதியை  தார் கம்பளம் இட்டு வீதியை அபிவிருத்தி செய்யுமாறு பிரதேச சபை  உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இதன்மூலம் வீரர் ருமேஷ் தரங்காவின் வீட்டுக்கான போக்குவரத்து வசதிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.