இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை
மக்களின் கவனத்தை திசைத்திருப்ப ஒரு தரப்பினர் இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். இந்த நாட்டில் மீண்டும் இனவாதம் என்பதற்கு இடமில்லை. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடுகிறோம்
2 ஆண்டு காலப்பகுதியில் . ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.கடுமையான நடவடிக்கைகளினால் பாதாளக் குழுக்களும், அவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கியவர்களும் கலக்கமடைந்துள்ளார்கள்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் ஆனந்த விஜேபால மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Post a Comment