அனோஜன் மரண தண்டனை ரத்து, சவுதி இளவரசரின் பங்களிப்பு மகத்தானது
இந்நிலையில், எதிர்கட்சி எம்பி நண்பர் பைசர் முஸ்தபா, (சற்று முன் அவரிடம் பேசினேன்..!) தலைமையில் சட்டதரணிகள் குழு, சவுதி சென்று, இது பற்றி உரிய சவுதி அரச தரப்புகளிடம் பேசி, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகுதான் மரண தண்டனை ரத்து என்ற நம்பிக்கை ஒளிக்கீற்று தோன்றியது.
மறுபுறம், சவுதி அராபிய அரசு, குறிப்பாக பிரதமர்-இளவரசர் சல்மான் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. இன்று சவுதியை சுற்றி உள்ள போர் மேகங்களுக்கு மத்தியில் அவர் மனிதாபிமானத்துடன் இந்த விடயத்தை அணுக நேரம் ஒதுக்கி இருக்கிறார் என்பதை நாம் மறக்க கூடாது.
இதை தவிர, இலங்கையின் உள்நாட்டு எதிர் கட்சிகளுக்கு இருக்கும் அதிகார வரம்புக்கு உட்பட்டு அனைத்து எதிரணி தரப்புகளும் இந்த விடயத்தில் சாதகமான பொது ஜன கருத்தை ஏற்படுத்தின. தரை மட்டத்தில் (Ground Level) எதிரணி FSP கட்சியின் தம்பி ரஜீவ், அனோஜன் குடும்பத்தாரை அழைத்து சென்று பல தரப்புகளை சந்திக்க செய்ததை நாம் பொது வெளியில் அடிக்கடி பார்த்தோம்.
மனோ_கணேசன் 15 Oct 26

Post a Comment