ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா - முகம்மட் முசர்ரப் தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்
கொழும்பு றோயல் கல்லூரியில் கணிதப் பிரிவில் உயர்தரம் கற்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொலிமர் விஞ்ஞானப் பிரிவில் கற்ற றம்ஸி முகம்மட் முசர்ரப், தங்கப் பதக்கம் பெறும் முதலாம் வகுப்பு பட்டதாரியாக பட்டம் பெற்றுள்ளார் (First Class Gold Medalist First)
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் 15.10.2026 அன்று நடைபெற்ற ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் 52வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் றம்ஸி முகம்மட் முசர்ரப் தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டு முதலாம் வகுப்பு பெற்ற பட்டதாரியாக கௌரவிக்கப்பட்டார்.
இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த றம்சி நதீரா தம்பதிகளின் மகனும், மர்ஹூம்களான இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர் பாறூக் (வில்லியம்) அல்ஹாஜ் அப்துல் கரீம் (யாழ், டிசைன் டெக்டைல்ஸ்) ஆகியோரின் பேரனுமாவார்.
www.jaffnamuslim.com

Post a Comment