குற்றம் செய்த பிக்குகளை இனிமேல், சிறைச்சாலை ஆடையுடன் வெளியே காணமுடியாது
சிறைவாசம் அனுபவிக்கும் பௌத்த பிக்குமார் வெளியில் அழைத்து வரப்படும் போது காவியுடை அணிய அனுமதி வழங்கப்பட்டு, அது தொடர்பான சுற்றுநிருபம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றுநிருபத்தின் பிரகாரம் இனிவரும் காலங்களில் சிறைவாசம் அனுபவிக்கும் பௌத்த பிக்குமார் வழக்கு அல்லது மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக சிறைச்சாலைக்கு வெளியில் அழைத்து வரப்படும்போது அவர்களுக்கு காவியுடை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது
எனினும் மகாநாயக்க தேரர்கள் யாரேனும் ஒரு பௌத்த பிக்கு தொடர்பில் காவியுடை அணிய அனுமதிக்க வேண்டாம் என்று சிபாரிசு செய்யும் பட்சத்தில் அவ்வாறான பிக்குமாருக்கு வழக்கம் போன்று சாதாரண வெள்ளை ஆடை மட்டும் அணிவித்து வெளியில் அழைத்துச் செல்லுமாறும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தனது சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

.jpg)
.jpg)
.jpg)

Post a Comment