சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற அனுமதிக்கலாமா..?


கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பில் விளக்கமளிக்க, எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (28) உத்தரவிட்டுள்ளார்.


சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக மீண்டும் அந்தநாட்டுக்குச் செல்ல வேண்டியுள்ளதாகத் தெரிவித்து, கோட்டாபய ராஜபக்ச சார்பில் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திறந்த நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். எனினும், வழக்கின் முறைப்பாட்டுத் தரப்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் எவரும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.