ஊடகவியலாளர் எச்.ஏ.சக்கூர் காலமானார்.


ஊடகவியலாளர் கலாபூசணம் எச்.ஏ.சக்கூர் இன்று 22.10.2026 காலமானார். 


மடவளை பஸார் மதீனா தேசிய பாடசாலையின் முன்னாள் ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் 1995ம் ஆண்டு முதல் லேக்கவுஸ் நிறுவனத்தில் பாத்ததும்பறை விசேட நிருபராக கடைமையாற்றி வந்தார். சிறிது காலம் நோய்வாய்பட்டிருந்த இவரது ஜனாசா நல்லடக்கம் மடவளையில் இடம் பெறவுள்ளது.


அதே நேரம்  25 ஆண்டுகளுக்கும் மேலாக மடவளை  மதீனா தேசிய பாடசாலையில் ஆசிரியராகவும், நூலகராகவும்  பணியாற்றி வந்துள்ளார்.  கண்டி ஹனபி பள்ளிவாசலின் வாசிகசாலைப் பொறுப்பாளராகவும் சிறிது காலம் கடமைாயற்றியுள்ளார். மடவளை வை.எம்.எம்.ஏ. அமைப்புடன் 1980களில் பல பொறுப்புள்ள பதவிகளையும் வகித்துள்ளார்.


 ஊடகம் மற்றும் எழுத்துத் துறைக்காக இவருக்கு கலாசார அமைச்சு  கலாபூசணம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.


(ஜே.எம்.ஹாபீஸ்) 

No comments

Powered by Blogger.