ராஜபக்ச குடும்பத்தினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டாலும் பரவாயில்லை, ஆனால்
ராஜபக்ச குடும்பத்தினரோ அல்லது வேறு யாராக இருந்தாலும் குற்றங்கள் செய்திருந்தால் சட்டத்தின்படி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டாலும் பரவாயில்லை, ஆனால் தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் முறையான விசாரணைகளின்றி அரசியல் பழிவாங்கும் நோக்கில் மட்டுமே அமைந்துள்ளன என முன்னாள் MP அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் மதத்துக்காகவும் நாட்டுக்காகவும் குரல் கொடுத்த போதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றார். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய நிலையில், தற்போது அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு அவரது துறவற ஆடை களையப்பட்டமையானது மதத்தின் மீதான பற்றையும் சமூக மதிப்பீடுகளையும் சிதைக்கும் செயலாகும்.
அறிஞர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய மரியாதை இதன் மூலம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, ஒழுக்கமற்ற சமூகம் உருவாக்கப்படுகின்றது. பௌத்த மதத்தைப் பாதுகாப்பது அவசியமானதுடன், எதிர்காலத்தில் ஏனைய மதங்களுக்கும் இத்தகைய நிலை ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

Post a Comment