ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் - யாழ்ப்பாண முஸ்லிம்கள் கோரிக்கை


- எம்.எஸ். முஹம்மத் -


வெளியேற்றப்பட்டு, மீள் குடியேறிய முஸ்லிம்கள் மேற்கொண்ட உரிமைப் போராட்டங்களில் மிகவும் வெற்றிகரமான ஒரு போராட்டமாக, மீள்குடியேற்ற உதவிகள் மற்றும் வீடமைப்பு திட்டத்தை தங்களுக்கும் வழங்குமாறு யாழ்ப்பாண முஸ்லிம்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டமாகும். 


2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்ற முயற்சிகளில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் இறங்கினர். 


ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்ற மீள் குடியேற்ற பதிவுகளில் 2000 குடும்பங்கள் மீள் குடியேற்ற விண்ணப்பங்களை சமர்பித்திருந்தனர். அந்த விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை ( 'அ'  கார்ட்) ,  குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகள், காணி உறுதி பிரதிகள், வீட்டு வரைவு படங்கள், மாநகர சபை கட்டணங்களுக்கான பற்றுச் சீட்டுகள்,  குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற கேட்கப் பட்ட எல்லா ஆவணங்களும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்கப் பட்டிருந்தன. காணி உறுதி பிரதிகள், வீட்டு வரைவு படங்கள், மாநகர சபை கட்டணங்களுக்கான பற்றுச் சீட்டுகள் போன்றவற்றை பெறுவதற்காக ஏராளமான பணத்தை மக்கள் செலுத்தியிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் கடன் வாங்கி அவ்வாறான கட்டணங்களை செலுத்தியிருந்தார்கள். 


அதுமட்டுமல்ல பற்றைகளாக கூரைகள் இல்லாமல் இருந்த கதவு நிலை ஜன்னல் போன்றவை உடைத்து களவாடப் பட்ட தமது காணிகளில் பலர் தங்கயிருந்தனர். சிலர் பாடசாலை  கட்டிடங்களில் எச்சங்களுக்குள் தஞ்சமடைந்து இருந்தனர். குடிக்க நீர் இல்லை. கிணறுகள் பல வருடங்கள் பாவிக்கப் படாததால் மிகவும் அசுத்தமாக காணப் பட்ட நிலையில் குளிப்பதற்கும் முகம் கழுவுவது போன்றவற்ரி செய்ய முடியாத நிலைமை காணப் பட்டது.  மலசல கூட்டங்களின் குழிகள் மற்றும் கோப்பைகள் கூட உடைத்து அளிக்கப் பட்டிருந்தன.  எவ்வாறு மலசல தேவைகளை நிறைவேற்றுவது?. 


வீடுகளுக்கு மறைப்பு இல்லை. இரண்டுமாதங்கள் கூரையற்ற  இடிபாடாக காணப் பட்ட கட்டிடங்களுக்குள்  நாட்களை நகர்த்திய பின்னர் யு என் எச் சி ஆர்  மூலமாக சில டென்ட்கள்  வழங்கப் பட்டன. ஆனால் வீடமைப்பு திட்டத்துக்கான எந்த உதவியும் யாழ் செயலாகத்தான் வழங்கப் பட வில்லை. நாட்கள் , வாரங்களாகின , வாரங்கள் மாதங்களாகி அது பிறகு ஆறு  வருடங்களாகியும் வீடமைப்பு திட்ட உதவிகள் எதுவும் இந்த மக்களுக்கு கிடைக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு  முதல் இந்திய அரசாங்கத்தால்  50000 வீடுகள் காட்டும் திட்டம் நாடிமுறைப்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தது. இதைவிட யு என் ஹாபிதாத் நிறுவனம், இலங்கை இராணுவத்தின் வீடமைப்பு திட்டங்களும் இடம்பெற்றன . இந்த திட்டங்களில் மீள்குடியேறிய  யாழ்ப்பாண முஸ்லிம்கள் உள்வாங்கப்ப படவில்லை.  


இந்த ஏமாற்றத்தினால் தொடர்ந்து அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ முடியாத நிலை ஏற்பட்ட போது யாழ்ப்பாணத்தில் தமது சொந்த காணிகளில் மீள்குடியேற சென்ற முஸ்லிம்கள் தாம் ஏற்கனவே வாழ்ந்து வந்த புத்தளம் போன்ற இடங்களில் காணப் பட்ட இடம்பெயர்ந்தோர் தங்கு முகாம்களுக்கே  திரும்பிச் சென்றனர். உடைந்து போன கட்டிடங்களுக்குள் கூரைகள் கதவு நிலை ஜன்னல் இன்றியும் நீர் இன்றியும் அல்லல் படுவதை விட  திருப்பிச் சென்று ஓரளவு தங்கள் கூடிய வசதியை கொண்ட இடம்பெயர்ந்தோர் தங்குமிடங்கள் அவர்களுடைய தெரிவாக இருந்தது. 


இவ்வாறான நிலையில் மீள்குடியேறிய மக்களில்  சிலர் நவுஷாத் என்பவரின் தலையில் 2015 ஆம் ஆண்டு ஒரு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். அதன் பிறகு தான் சுமார் 200 குடும்பங்களுக்கு இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழும் சுமார் 25 குடும்பங்களுக்கு வேறு திட்டங்கள் மூலமும் வீடுகள் வழங்கப் பட்டன. 


2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி பழைய பதிவுகள் தொலைந்து விட்டன என கூறி மீண்டும் ஒரு மீள்குடியேற்ற பதிவு ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்றது. பழைய பதிவுகள் தொலைந்து விட்டன என கூறுவன எவ்வாறான ஒரு அலட்சிய போக்கு. இது குறித்தும் தற்போதைய அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும். 


மீள்குடியேற்ற வீடமைப்பு உதவி கேட்டு 2200 குடும்பங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 225 குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டத்தை கடுமையான நிபந்தனைகளின் கீழ் வழங்கி விட்டு ஏனையோரை நடுவீதியில் விட்ட செயல் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். 

2026 ஒக்டொபரில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டு 36 வருடங்களாகின்றன.  2010 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற தொடங்கினர் என்று பார்த்தால் கடந்த 17  வருடங்களில் 10 சதவிகிதமான  விண்ணப்பதாரிகளுக்கே வீட்டமைப்புத் திட்டம் கிடைத்துள்ளது. வீடமைப்பு திட்டத்தை கையாளாக கூடிய தகுதியான அதிகாரிகள் பணியில் அமர்த்தப் பட்டிருந்தார்களா என்றும் அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்.


இது ஒரு திட்டமிட்ட மீள்குடியேற்ற தடையா என்பதை தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி ஆணைக்குழு  அமைத்து அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மூலம் அதிகார துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதா என  விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.  மீளக் குடியேறிய யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும் மீளக் குடியேற விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்களை சமர்ப்பித்து இதுவரை எதுவும் கிடைக்காத முஸ்லிம்களுக்கும் நீதி நிலைநாட்டப் பட்டு அவர்களுடிய மீள்குடியேற்ற தேவைகளாகிய காணியுடன் கூடிய வீடு, அல்லது தொடர்மாடி வீட்டமைப்புத் திட்டத்தில் வீடு, அல்லது அவர்களது காணியில் ஒரு வீடு என்ற வகையில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கப் பட வேண்டும்.

No comments

Powered by Blogger.