பிரான்சில் முஸ்லிம்களைக் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல்
பிரான்சில் முஸ்லிம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சிலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர். இன்று (23) நடந்த இந்தச் சம்பவத்தை 'மிகவும் கொடூரமான இனவெறித் தாக்குதல்' என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வர்ணித்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக துப்பாக்கிதாரி 'கெவின்' என்பவன் கைது செய்யபட்டுள்ளான். துப்பாக்கிதாரி, வாகனத்தில் இருந்தபடி கொடூரமான, உயிர்களைப் பறிக்கும் தாக்குதலை நடத்தியுள்ளான்.
இந்தக் கொடூரமான தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். அவர்களில் 12 வயது சிறுமி ஒருவர் எட்டு முறை கொடூரமாகச் சுடப்பட்டுள்ளார்.

Post a Comment