சுவிட்சர்லாந்தில் இருந்து இலங்கைக்கு, மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கியது
சுவிட்சர்லாந்து (Edelweiss) நிறுவனம் குளிர்கால பருவத்திற்காக இலங்கைக்கான (BIA) தனது விமான சேவைகளை மீண்டும் இன்று (27) தொடங்கியுள்ளது.
இதன்மூலம் சுவிட்சர்லாந்தும் இலங்கையும் வாரத்திற்கு மூன்று விமான சேவைகள் வாயிலாக மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, துடிப்பான பாரம்பரிய கண்டி நடன நிகழ்ச்சியுடன் பயணிகள் வரவேற்கப்பட்டனர். இது அவர்களின் வருகைக்கு ஒரு கனிவான இலங்கை பாணியிலான வரவேற்பை அளித்தது.




Post a Comment