நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகு சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் - ஜனாதிபதி
உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு அரசு மதிப்பளிக்கும். நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடாது. சட்டங்களை இயற்றுவது நாடாளுமன்றத்தின் பொறுப்பு. அவற்றை விசாரிப்பது பொலிஸார் உள்ளிட்ட அமைப்புகளின் பணி. இருப்பினும், சட்டத்தை விளக்கி நடைமுறைப்படுத்தும் இறுதி அதிகாரம் நீதித்துறைக்கே, குறிப்பாக உயர் நீதிமன்றத்திற்கே உரியது. நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பிறகு சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். நீதிமன்ற முடிவுகளுக்கு அரசாங்கம் கட்டுப்படும். அதற்கு அப்பாற்பட்ட தீர்வுகளை எதிர்பார்ப்பது முறையல்ல.
இன்று (18) பதுளையில் NPP யின் மகளிர் பேரணியில் உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞானசாரரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென சில தரப்புகள் வாதிடும் நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Post a Comment