வட்சப் குரூப்பில் பணம் சேர்த்துவிட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோட முயன்றவர் கைது


வாட்ஸ்அப் குழு மூலம் பரிசுப் பொதி தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது.


வாட்ஸ்அப் குழு ஒன்றின் மூலம் பெறுமதியான பரிசுப் பொதி வழங்குவதாகக் கூறி, 14 இலட்சம் பணத்தைச் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்ய வைத்து, மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.​


இதனையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.​அதன்படி,  46 வயதுடைய நுகேகொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் வைத்து விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


​இச்சம்பவம் குறித்து கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண அலகினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.