அஜர்பைஜான் அதிபருடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேச்சு
அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெறும் ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின் (CICA) 7ஆவது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ள நிலையில், அஜர்பைஜான் இல்ஹாம் அலியேவை இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்தித்து பேசியுள்ளார்.
இதன்போது, இலங்கைக்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகக் குறிப்பாக, வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை மற்றும் எரிசக்தித் துறைகளில், குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில், ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
ஆசியாவின் மிகப்பெரிய பிராந்திய அரசுகளுக்கிடையிலான மன்றமாக விளங்கும் CICA, பிராந்திய நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதுடன், ஆசியா முழுவதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post a Comment