அல்-தயிஃபிடம் கண்ணீர் விட்ட யஹ்யா சின்வார்
அல் ஜசீரா வெளியிட்ட பிரத்யேகக் காட்சிகளில், 2021-ஆம் ஆண்டு காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய போரின் முடிவில், போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த செய்தியை முஹம்மது அல்-தயிஃபிடம் தொலைபேசி வாயிலாகப் பகிர்ந்துகொள்ளும்போது யஹ்யா சின்வார் கண்ணீர் விடுவதைக் காண முடிகிறது. அல்-அக்ஸா மசூதியில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் ஷேக் ஜர்ரா பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் அந்தப் போர் வெடித்திருந்தது.
குறித்த வீடியோவில் சின்வார் முஹம்மது அல்-தயிஃபிற்காக கேட்கும் துஆ நம்மையும் நெகிழச் செய்கிறது.
முஹம்மது அல்-தயிப் 2024 ஜூலை 13 அன்று காசாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டு தியாகியானார்.

Post a Comment