ஜனாதிபதி தாதியர் தொடர்பான பிரச்சினைக்கும் உரிய தீர்வு வழங்க வேண்டும்
ஞானசாரர் விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார மேற்கொண்ட நடவடிக்கைகளைப் போன்று, கல்முனை வைத்தியசாலை மற்றும் தாதியர் தொடர்பான பிரச்சினைக்கும் உரிய சுற்றறிக்கை மாற்றங்களை மேற்கொண்டு தீர்வு வழங்க வேண்டும் என மனோ கணேசன் Mp தெரிவித்துள்ளார்.
கல்முனை வைத்தியசாலை மற்றும் தாதியர் தொடர்பான பிரச்சினைக்கும் ஜனாதிபதி தீர்வு வழங்க வேண்டும். இதற்குத் தேவையான சுற்றறிக்கை மாற்றங்களை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட குழுவுக்கு காலக்கெடு விதித்து உடனடியாகப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
அரசாங்கம் தவறு செய்தால் அதனைத் தவறு என்றும், எதிர்க்கட்சி தவறு செய்தால் அதனையும் தவறு என்றும் சுட்டிக்காட்ட வேண்டும். சரியானதைச் சரி என்றும், தவறானதைத் தவறு என்றும் கூறுவதே நடுநிலையான அணுகுமுறையாகும். 'நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' என்றார்.

Post a Comment