தம்மாம் விமான நிலையம் மீது தாக்குதல், அவசரமாக திருப்பிவிடப்பட்டுள்ள விமானங்கள்
சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை (ஒக்டோபர் 22) அதிகாலை இதனை அறிவித்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
திருப்பிவிடப்பட்டுள்ள விமானங்கள்
நேற்றிரவு (21) நடந்த இந்த தாக்குதலில் விமான நிலையத்தில் சில பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மேலும் கூறியுள்ளது.

Post a Comment