Header Ads



8 கோடிக்கும் அதிக சொத்துக்கள், பணம் முடக்கம்


போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட ரூ. 8.5 கோடிக்கும் அதிக பெறுமதியான பணமும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள 15 மில்லியன் ரூபாய் பணமும், யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 2 மாடி வீடொன்றுமே இவ்வாறு தற்காலிகமாக நீதிமன்ற உத்தரவுக்கமைய முடக்கப்பட்டுள்ளன.


கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளினால் 15 மில்லியன் ரூபாய் பணம், லொறி ஒன்றுடன், 5 பேரையும் கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.


மேலதிக விசாரணைகளில், யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரொருவர், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு 7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரு மாடி வீட்டை நிர்மாணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.