பிலிப்பைன்ஸ் நாட்டில் தன்னாட்சி பிராந்தியத்தின் முதல் முஸ்லிம் முதல்வராக 69 வயதான அப்துல்ரப் மக்காகுவா


பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்கு பகுதி  பாங்சமோரோ தன்னாட்சி பிராந்தியத்தின் முதல் முஸ்லிம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்  69 வயதான அப்துல்ரப் மக்காகுவா.


பிலிப்பைன்ஸின் முஸ்லிம்கள் பெரும்பான்மை கொண்ட   தன்னாட்சி பிராந்தியமான BARMM  (Bangsamoro Autonomous Region Of  Muslim Mindanao) பகுதி மக்கள்  தங்களின் பத்தாண்டு கால அமைதி போராட்டத்திற்குப் பிறகு முதன் முறையாகத் தேர்தலை நடத்தி  தங்கள் முதலமைச்சரை தேர்ந்தெடுத்துள்ளனர். 


கடந்த செப்டம்பர் 14 அன்று 84%-க்கும் அதிகமான வாக்குப்பதிவுடன் தேர்தல் நடைபெற்ற நிலையில்,  புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  எண்பது  உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 51 வாக்குகள் பெற்று  BARMM மாநில  முதலமைச்சராக  அப்துல்ரப் மககாகுவா  தேர்வாகியுள்ளார்.


​புதிய முதலமைச்சராக நேற்று (31) ஜும்மா தொழுகைக்கு பின் பொறுப்பேற்றுள்ள 69 வயதான மக்காகுவா, மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியின் (MILF) மூத்த தலைவராவார்.  


Colachel Azheem 

No comments

Powered by Blogger.