கணினித் தரவுத்தளத்தில் போலியான தகவல்களைப் பதிவு செய்து, 59,656,496.84 ரூபாயை கையாடிய சம்பவம்


தனியார் நிறுவனமொன்றின் கணினித் தரவுத்தளத்தில் போலியான தகவல்களைப் பதிவு செய்து, 59,656,496.84 ரூபாயை முறைகேடாகக் கையாடிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு 4 இற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் நேற்று (30) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் மாளிகாவத்தையைச் சேர்ந்த 30 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.