Header Ads



5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் தாய்லாந்து நாட்டவர்கள் கைது


5 கோடியே 10 லட்சம் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறிச் செல்ல முற்பட்ட மூன்று வெளிநாட்டுப் பயணிகள் இன்று (15) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதுடைய இருவர் மற்றும் 33 வயதுடைய ஒருவர் அடங்களாக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சாரதிகள் என அடையாளங்காணப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் மூவரும் இன்று (15) அதிகாலை 12:30 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் ஏர்வேஸ் சேவைக்குச் சொந்தமான TG-307 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.