புத்தளம் - அநுராதபுரம் வீதியில் கோர விபத்து


புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ 19ஆவது மைல்கல் பகுதியில் நேற்று (22) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் நோக்கிப் பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்


பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில்,  கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியோரத்தில் இருந்த பாலத்தில் மோதி, வீதியை விட்டு விலகிச் சென்று சுமார் 200 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, அதி உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதி கவிழ்ந்துள்ளது.

No comments

Powered by Blogger.