Header Ads



கழிவறையில் பிறந்த குழந்தையை கைவிட முயன்றவர் மடக்கிப் பிடிப்பு


கரவனெல்ல பொது பேருந்து நிலையத்தில் உள்ள பெண்களுக்கான பொதுக் கழிவறை தொட்டியில், பிறந்த குழந்தையை கைவிட முயன்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


30 வயதுடைய குறித்த பெண் இன்று (01) மக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


குறித்த பெண், அன்றைய தினமே பிறந்ததாகக் கருதப்படும் குழந்தையை கழிவறையில் இருந்த நீர்த் தொட்டிக்குள் வைத்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


மருத்துவமனைத் தகவல்களின்படி, குழந்தை தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. See less

No comments

Powered by Blogger.