ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான பயணம் சிறக்க வாழ்த்து
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் நிகழ்வில் முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று கொடுத்த ருமேஷ் தரங்கவிற்கு ஜனாதிபதி அனுரகுமார வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ருமேஷ் தரங்க வரலாற்றில் இடம்பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இலங்கை மக்கள் சார்பிலும் விளையாட்டு உலகின் மிகயுயர்ந்த வெற்றியான ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான அவரது பயணம் சிறக்க வாழ்த்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment