மகிந்தவின் காலத்தில் எந்த துறையும் ஒதுக்கப்படாத பௌசிக்கு, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சிரேஷ்ட அமைச்சராக இருந்த ஏ.எச்.எம். பௌசிக்கு எந்தவொரு துறையும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. அதன் காரணமாக அவர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு உரித்தான வாகனமொன்றை தனது அலுவல்களுக்காகப் பயன்படுத்தியிருந்தார்.
குறித்த செயற்பாடு பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக இன்று(29) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பௌசி, தனது தவறுக்கு அபராதமாக 66 லட்சம் ரூபாவை திறைசேரியின் ஒருங்கிணைந்த நிதிக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தொகையில்1,664,334.93 ரூபாவை ஒரு மாதத்திற்குள்ளும், மீதியை 2 மாதங்களுக்குள் செலுத்துமாறும் உத்தரவிட்டள்ளது.
மேலும் சிலுமின, சண்டே ஒப்சர்வர், தினகரன் வாரமஞ்சரி என்பவற்றில் குறித்த வாகனத்தின் புகைப்படத்துடன் அரைப்பக்க விளம்பரமொன்றை வெளியிட்டு பொதுமக்களிடம் மன்னிப்புக் கோருமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. See less

Post a Comment