Header Ads



காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 57ஆவது பட்டமளிப்பு விழா


காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் 57ஆவது பட்டமளிப்பு விழா இன்று (06) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பரீட் மண்டபத்தில்  நடைபெற்றது.


ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்-ஷெய்க் ஏ.எம். அலியார் (பலாஹி, ரியாழி), MA அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் ஏ.எஸ்.எம். பாறூக் (பலாஹி, அஸ்ஹரி), MA முன்னிலை வகித்தார்.


நிகழ்வின் பிரதம விருந்தினராக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா நிறுவனத்தின் முதல்வர் அஷ்-ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் (நளீமி), விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


இதன்போது, ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் தமது கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் மற்றும் இக்கல்லூரியில் கல்வி கற்று தற்போது கலாநிதி பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்ட பலரும், கல்வி மற்றும் மார்க்கத் துறைகளில் அவர்கள் பெற்ற சாதனைகளைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.





No comments

Powered by Blogger.